பெருந்தொற்றும் பொய் கூறும்
நீண்ட நாட்களுக்கு பின் தமிழில் ஒரு பதிவு. English is a paragraph, Tamil is an emotion.
பெருந்தொற்று குறித்து உலகளவில் எண்ணற்ற கூறுகள் வந்துவிட்டன. இவை அனைத்தும் வதந்திகள் என்று நாம் அறிவோம். இதோ இப்படியும் ஒரு சாத்தியக்கூறு உள்ளது என்று இதையும் சேர்த்து படித்திடுங்கள்.ஏனெனில் இவ்வாறான பொய் கூறுகள் அரசாங்கம் மற்றும் மக்களை சற்று நல்ல முறையில் துரிதப்படுத்தியுள்ளது.
உலகில் அடிமையாய் இருந்து விடுதலை கண்டு 70 ஆண்டுகளில் பற்பல வளர்ச்சிகளை கண்டு மிகவும் வேகமாய் முன்னேறிய நாடு வேறு ஏதேனும் உண்டோ.1947ல் ஆரம்பித்து இரண்டு தலைமுறைகள் மட்டுமே கடந்து உள்ளன. மறுமலர்ச்சி என்பது எளிதல்ல. மறுமலர்ச்சிக்கு உதாரனம் ஜப்பான் என்று சொல்வோம் ஆனால் அவர்கள் எதனயம் யாரிடமும் இழக்கவில்லை. அடிப்படை என்றும் அழியவில்லை. பல அடிமை நாடுகள் இன்னும் அடியில் இருந்து மீளவே இல்லை.
குரு படத்தின் வசனத்தில் சொல்லவேண்டும் என்றால் நம்முடைய வேகம் யாருக்கும் பிடிக்கவில்லை. நமது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் இளைய தலைமுறையினர் மிக வேகமாக முன்னேறி வருகிறார்கள். மிகவும் வலம் வந்த வாட்ஸாப்ப் வசனம்: ஒரு நாட்டை உலுக்க அணுகுண்டோ ரசாயனமோ வேண்டாம். அந்த நாட்டின் கல்வியை சீரழித்தால் அதுவே வீழ்ச்சி.
பள்ளி கல்வி சிறுவர்களுக்கு இன்றியமையாதது. அவர்களின் மன ரீதியான வளர்ச்சிக்கும் சேர்த்து. இன்று பெருமளவில் இந்திய குழந்தைகள் சாதித்து வருகின்றன.வேற்று கிரகம் செல்லும் ஆய்வுகள் செய்கிறார்கள்.விவசாய முன்னேற்றம் பற்றி சிந்திக்கிறார்கள். முன்னேறிட வேண்டும் என்ற உந்துதல் உள்ளது.
இதெற்கெல்லாம் ஒரு வேக தடை போடவேண்டும்.குழந்தைகளின் திறனை அடக்க வேண்டும். பள்ளிகளை மூட வேண்டும்.இதுவே இந்த நாட்டை வலுவிழக்க செய்யும். இதுவே பெருந்தொற்றின் நோக்கம். ஏன் இருக்க கூடாதா. பல கூறுகளில் இதுவும் ஒன்றாக எடுத்துக்கொள்வோம். அப்பொழுதுதான் நாமும் அரசாங்கமும் இணைந்து பள்ளிகளை திறக்க செயல்படுவோம்.
வலை கல்வி என்றும் பள்ளி கல்விக்கு நிகர் ஆகாது.ஏனப்பா நிலைமை தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறாய் என்று சொன்னால் ,ஒவ்வொரு வருடமும் மர்ம காய்ச்சல் வருகிறது போகிறது ஆனால் ஒரு நாள் விடுமுறை கூட இல்லை அதற்கு. இதுவும் அதுவும் ஒன்றில்லை எனினும் வருடக்கணக்கில் திறக்காமல் வெறும் சிறு பிள்ளைகள் தானே அப்பறம் பார்த்துக்கொள்வோம் என்ற மனப்பான்மை மிகவும் வேதனை தரும் ஒன்று.
மகிழ்ச்சி நிறைந்த கல்வியே திறமையை ஊக்குவிக்கும் கல்வி. இன்றும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் இதனை இழக்கிறார்கள்.இது தற்காலிகமான பாதிப்பு இல்லை என்பதே உண்மை. இதனை சரி கட்ட முதலில் நாம் அதன் பாதிப்பை உணர வேண்டும். எல்லோருக்கும் கூட்டான்சோறு திறந்த வெளி பல பிள்ளைகள் நிறைந்த சமுதாயம் கிடைக்கப்பெறுவதில்லை. டிஜிட்டல் மீடியா வில் மூழ்கியுள்ளனர்.
இப்ப என்னதான் செய்யணும். 4 முதல் 10 வயது உள்ள குழந்தைகள் காட்டாயம் பள்ளிக்கு சென்று கல்வியை தொடர வேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசு செய்ய வேண்டும். Unorganized sector பசி வருமானத்தால் அழியாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் அதே அடிப்படையில் இக்குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளை கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மை.
ஆனால் இதனால் தொற்று ஏற்படும் என்று நினைத்தால் கடைக்கு செல்லும் முன் அதே கறபனையோடு செல்லாமல் விடுங்கள். முடியாது அல்லவா. அதே முடியாது தான் பள்ளிகளுக்கும் என்ற சிந்தனை ஏன் இல்லை.
தனக்கு வந்தால் தன் தலைவலி தெரியும் என்று சொல்வது புரிகிறது இந்த ஏக்கத்தை வெளிப்படுத்த வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
Ana is back, write more and more frequent
ReplyDeleteGood that you are writing blog. If I translate in English may be I will miss your emotion.
ReplyDeleteIt is essentially about opening up schools Brahmaiah.
DeleteChildren are for sure missing learning with fun part. High time for schools to reopen with all norms in place.. good for kids' health also
ReplyDelete