பெருந்தொற்றும் பொய் கூறும்
நீண்ட நாட்களுக்கு பின் தமிழில் ஒரு பதிவு. English is a paragraph, Tamil is an emotion. பெருந்தொற்று குறித்து உலகளவில் எண்ணற்ற கூறுகள் வந்துவிட்டன. இவை அனைத்தும் வதந்திகள் என்று நாம் அறிவோம். இதோ இப்படியும் ஒரு சாத்தியக்கூறு உள்ளது என்று இதையும் சேர்த்து படித்திடுங்கள்.ஏனெனில் இவ்வாறான பொய் கூறுகள் அரசாங்கம் மற்றும் மக்களை சற்று நல்ல முறையில் துரிதப்படுத்தியுள்ளது. உலகில் அடிமையாய் இருந்து விடுதலை கண்டு 70 ஆண்டுகளில் பற்பல வளர்ச்சிகளை கண்டு மிகவும் வேகமாய் முன்னேறிய நாடு வேறு ஏதேனும் உண்டோ.1947ல் ஆரம்பித்து இரண்டு தலைமுறைகள் மட்டுமே கடந்து உள்ளன. மறுமலர்ச்சி என்பது எளிதல்ல. மறுமலர்ச்சிக்கு உதாரனம் ஜப்பான் என்று சொல்வோம் ஆனால் அவர்கள் எதனயம் யாரிடமும் இழக்கவில்லை. அடிப்படை என்றும் அழியவில்லை. பல அடிமை நாடுகள் இன்னும் அடியில் இருந்து மீளவே இல்லை. குரு படத்தின் வசனத்தில் சொல்லவேண்டும் என்றால் நம்முடைய வேகம் யாருக்கும் பிடிக்கவில்லை. நமது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் இளைய தலைமுறையினர் மிக வேகமாக முன்னேறி வருகிறார்கள். மிகவும் வலம் வந்த வாட்ஸாப்ப் வசனம்: ...